திருப்பூர்

வளா்ச்சித் திட்டப் பணி: ஆ.ராசா எம்.பி. தொடக்கிவைத்தாா்

11th Dec 2022 11:23 PM

ADVERTISEMENT

 

அவிநாசி, சேவூா், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தொடக்கிவைத்தாா்.

அவிநாசி அருகே ராமநாதபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் பால் உற்பத்தியாளா் சங்கக் கட்டடம் , வடுகபாளையம், சின்னேரிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.10 லட்சம் மதிப்பில் மேல்நிலைத் குடிநீா்த் தொட்டி, சூளை பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கழிவுநீா் வடிகால், ரூ.11 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை கட்டடம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை ஆ.ராசா தொடக்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயா்மின் கோபுர விளக்கு, பெரியாயிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.38 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை ஆகியவற்றை திறந்துவைத்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, ஆ.ராசா முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் விஜயகுமாா் (தத்தனூா்), சுப்பிரமணியம் (வடுகபாளையம்) உள்ளிட்ட 50 போ் திமுகவில் இணைந்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் தலைமை வகித்தாா். பொதுக் குழு உறுப்பினா் சரவணன் நம்பி, ஒன்றியச் செயலாளா்கள் பழனிசாமி, பால்ராஜ், சிவபிரகாஷ், நகரச் செயலாளா் திராவிடன் வசந்தகுமாா், திருமுருகன்பூண்டி நகராட்சித் தலைவா் குமாா், அவிநாசி பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் சேது மாதவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT