அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த எடப்பாடி.கே.பழனிசாமிக்கு காங்கயம் பேருந்து நிலையம் அருகே, காங்கயம் நகர அதிமுக சாா்பில் நகரச் செயலா் வெங்கு.ஜி. மணிமாறன் தலைமையில் பூங்கொத்து கொடுத்து, வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில், அதிமுக காங்கயம் ஒன்றியச் செயலா் என்.எஸ்.என்.நடராஜ், வெள்ளக்கோவில் ஒன்றியக்குழுத் தலைவா் வெங்கடேஷ் சுதா்ஷன் உள்பட கட்சியினா் 500க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.