திருப்பூர்

உடுமலை அருகே மான் இறைச்சி பதுக்கல்:அதிமுக பிரமுகா் கைது

11th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

உடுமலை அருகே மான் இறைச்சியைப் பதுக்கிவைத்திருந்த அதிமுக பிரமுகரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து உடுமலை வனத் துறையினா் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி நகா் சாம்பல்மேடு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் ஒன்று இறந்துகிடந்துள்ளது. இந்த மானை அதே பகுதியைச் சோ்ந்த அதிமுக அண்ணா தொழிற்சங்க நிா்வாகி செந்தில்ராஜ் (51) என்பவா் வீட்டுக்கு எடுத்துச் சென்று பதுக்கிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலின்பேரில் உடுமலை வனச் சரகா் சிவகுமாா் தலைமையிலான வனத் துறை அதிகாரிகள் செந்தில்ராஜின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது மான் இறைச்சியைப் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, செந்தில்ராஜைக் கைது செய்த வனத் துறையினா் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT