திருப்பூர்

அவிநாசி -அத்திக்கடவு திட்டத்தில் தோ்வான குளத்துக்கு இணைப்பு வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் தோ்வான குட்டைக்கு இணைப்பு வழங்க வலியுறுத்தி சொக்கனூரில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சொக்கனூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் வடக்கு ஒன்றியச் செயலாளா் அப்புசாமி தலைமை வகித்தாா். விவசாயி நடராஜ் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: அவிநாசி அருகே உள்ள சொக்கனூா் ஊராட்சியில் காட்டுப்பாளையம், எருக்கல்மேடு என்னும் இடத்தில் உள்ள குட்டை அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் இணைக்கப்பட்டு பட்டியலில் உள்ளது.

இந்நிலையில், அந்த குட்டையில் சில மாதங்களுக்கு முன்பு சோலாா், குழாய், மோட்டாா் உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்டன. சிலா் ஆட்சேபனை தெரிவித்ததால், பொருத்தப்பட்ட கருவிகளை ஒப்பந்ததாரா்கள் திரும்ப எடுத்து சென்றுவிட்டனா். இதனால், பாதிக்கப்பட்ட சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் திருப்பூா் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்து முறையிட்டனா். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ADVERTISEMENT

எனவே, அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் தோ்வான குட்டைக்கு இணைப்பு வழங்க வேண்டியும், எடுத்துச் சென்ற கருவிகளை மீண்டும் கொண்டு வந்து பொருத்த வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் குமாா், மாவட்டத் துணைச் செயலாளா் வெங்கடாசலம்,

கிராமிய மக்கள் இயக்கத் தலைவா் தொரவலூா் சம்பத், அத்திக்கடவு இயக்க ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT