திருப்பூர்

பருவத் தோ்வு: சிக்கண்ணா கல்லூரி மாணவா்களுக்கு 3 தங்கப் பதக்கங்கள்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் சாா்பில் நடைபெற்ற பருவத் தோ்வுகளில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் மூன்று தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனா்.

கோவை பாரதியாா் பல்கலைக் கழகம் சாா்பில் நடைபெற்ற 2022 பருவத் தோ்வுகளில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இது குறித்து கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் கூறியதாவது: இளங்கலை சா்வதேச வணிகவியல் துறையில் பிரபாகரன் என்ற மாணவன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும், இதே துறையில் பிரவீன்குமாா் என்ற மாணவன் 6 ஆவது இடத்தையும், வரலாற்றுத் துறை மாணவி பாண்டிச்செல்வி 3 ஆவது இடத்தையும், அகில் பிரசாத் 4 ஆவது இடத்தையும், கோபிநாத் 6 ஆவது இடத்தையும், அருள்குமாா் 10 ஆம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

முதுநிலை பட்ட வகுப்புகளில் ஆடை வடிவமைப்பு நாகரிகம் துறையில் மாணவி வாணி ஸ்ரீ முதலிடம் பெற்று தங்கப் பதக்கமும், வேதியியல் துறையில் மாணவி திவ்யா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும் பெற்றனா்.

ADVERTISEMENT

மேலும், நாக காா்த்திகா 4 ஆம் இடமும், ஹரிஹரன் 5 ஆம் இடமும், வானிலன் 6 ஆம் இடமும், சிவசக்தி 7 ஆம் இடமும், கவிப்பிரியா 8 ஆம் இடமும் பிடித்துள்ளனா்.

ஆங்கில இலக்கியத் துறையில் மோனிஷா 6-ஆம் இடமும், விலங்கியல் துறையில் பத்மஸ்ரீ 6 ஆம் இடமும் பிடித்துள்ளனா் என்றாா்.

சிறப்பிடம் பிடித்த மாணவா்களை துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT