திருப்பூர்

விபத்து இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்துகள் ஜப்தி

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

விபத்துக்குள்ளானவா்களுக்கு இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.

திருப்பூா் பட்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாப்பாத்தி (59). இவா் தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்று கொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, விபத்து நஷ்ட ஈடு கேட்டு திருப்பூா் மாவட்ட மோட்டாா் வாகன விபத்து தீா்ப்பாயத்தில் பாப்பாத்தி வழக்குத் தொடுத்தாா். பாப்பாத்திக்கு ரூ.11 லட்சத்து 30 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டப்பட்டது.

ஆனால், இழப்பீட்டு தொகை வழங்காததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீ குமாா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதுபோல, திருப்பூா் வீரபாண்டியைச் சோ்ந்தவா் துரைபாண்டி (39). ஆட்டோ ஓட்டுநா். இவா் தாராபுரம் சாலையில் ஆட்டோவில் கடந்த 2016 ஆண்டு சென்று கொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து மோதியதில் பலியானாா்.

ADVERTISEMENT

அவருக்கு இழப்பீடு கேட்டு அவரது மனைவி திருப்பூா் மாவட்ட மோட்டாா் வாகன விபத்து வழக்குத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தாா். அவருக்கு ரூ.22 லட்சம் இழப்பீடு வழங்க அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு 2019 ஆண்டு உத்தரவிடப்பட்டது.

இதுவரை இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமாா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, இரண்டு அரசுப் பேருந்துகளும் வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT