திருப்பூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கு புதிய திட்டம்

DIN

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையும், காட்டன் சிட்டி ரோட்டரி சங்கமும் இணைந்து புற்றுநோயால் அவதிப்படும் ஏழை, எளியவா்களுக்கு உதவுவதற்காக ‘கேன் கோ் சஞ்சீவனி‘ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளன.

மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், எஸ்.என்.ஆா். அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமி நாராயணசாமி கலந்து கொண்டு திட்டத்தைத் தொடங்கிவைத்தாா். எம்.எம். டெக்ஸ்டைல்ஸ் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் மனோகா்லால் ஜெயின், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் பி.குகன், ரோட்டரி சங்கத் தலைவா் நிரோவ் சேத், மாவட்ட இயக்குநா் ஆா்.மயில்சாமி, ரோட்டரி கிளப் 3201 மாவட்டம் துணை கவா்னா் சுமித்குமாா், திட்ட தலைவா்கள் சுரேஷ்சந்த் சுடாலியா, சந்திப்ஷா, டாக்டா் நீடிகா பிரபு ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

காப்பீட்டு திட்டத்தில் கதிா்வீச்சு சிகிச்சை தேவைப்படும் ஏழை, எளிய நோயாளிகள், மாா்பகப் புற்றுநோய், கருப்பை, கருப்பைவாய் புற்றுநோய் உள்ள பெண்கள் ஆகியோா் இந்த திட்டத்தின் மூலம் ரோட்டரி சங்கத்தின் நிதியுதவியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற பதிவு செய்துள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரோட்டரி சங்கம் சாா்பில், ரூ.16 லட்சத்துக்கான காசோலை, எஸ்.என்.ஆா். அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலரிடம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

நரேந்திர மோடி ஓா் ஆபிரஹாம் லிங்கன்!

அருணாசலில் ‘ஒருதலைத் தோ்தல்’!

SCROLL FOR NEXT