திருப்பூர்

தேசிய கராத்தே போட்டி:அருள்புரம் ஜெயந்தி பள்ளி மாணவா்கள் வெற்றி

DIN

தேசிய கராத்தே போட்டியில் பல்லடம் அருள்புரம் ஜெயந்தி பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற 17ஆவது தேசிய கராத்தே போட்டியில் 8 வயது முதல் 14 வயதுக்கு உள்பட்ட கட்டா பிரிவில் கெளதம், முவின்குமாா் முதலிடமும், பிரவீன், ராபின், ஜீவநித்யா ஸ்ரீ ஆகியோா் இரண்டாமிடமும், மொ்லின் ஸ்வேதா மூன்றாமிடமும் பெற்றனா்.

குமித்தே பிரிவில் 26 கிலோ முதல் 50 கிலோ எடை வரையிலான பிரிவில் மொ்லின் ஸ்வேதா முதலிடமும், பிரவீன், முவின்குமாா் இரண்டாமிடமும், ராபின், ஜீவநித்யாஸ்ரீ, கெளதம் மூன்றாமிடமும் பெற்றனா். 10 வயது முதல் 13 வயதுக்கு உள்பட்ட யோகா பிரிவில் சனாசாருமதி, இந்துமிதா முதலிடம் பெற்றனா்.

திருப்பூா் மாவட்ட அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் விமல் இரண்டாமிடமும், 19 வயதுக்கு உள்பட்ட குத்துச்சண்டை போட்டியில் வைஷ்ணவி, அஞ்சலிராய் ஆகியோா் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வாகியுள்ளனா்.

இவா்களை பள்ளிக் குழுமத் தலைவா் மற்றும் தாளாளா் கிருஷ்ணன், இயக்குநா் விஜயராஜன், மெட்ரிக். பள்ளி முதல்வா் சேகா்குமாா், உடற்கல்வி ஆசிரியா்கள் ஆனந்த், காளிதாஸ், கராத்தே பயிற்றுநா் மகேந்திரன், யோகா பயிற்றுநா் அன்புத்தம்பி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT