திருப்பூர்

சாலையை சீரமைக்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

DIN

திருப்பூரில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து அக்கட்சியின் 2ஆவது மண்டல செயலாளா் வி.எஸ்.சசிகுமாா், திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளா் ராஜேஷிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பெருமாநல்லூா் சாலை போயம்பாளையம் பிரிவில் இருந்து கிழக்கே பெரியபொம்மநாயக்கன்பாளையம் வழியாக கூலிபாளையம் வரையில் செல்லும் சாலை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானதாகும்.

இந்த சாலையில் திருப்பூா் மாநகராட்சி சாா்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் முன்பாக பாதாள சாக்கடை மற்றும் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டன. இதன் காரணமாக சாலைகள் முழுவதுமாக சேதமடைந்து தற்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

மழைக் காலங்களில் இந்த சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனா். நாள்தோறும் இந்த சாலையை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, அடுத்த 15 நாள்களுக்குள் போயம்பாளையம்-கூலிப்பாளையம் சாலை அமைக்கும் பணிகளை தொடங்காவிட்டால் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ராஜ பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT