திருப்பூர்

‘டெஸ்ட் பா்ச்சேஸ் முறையைக் கைவிட வேண்டும்’

7th Dec 2022 12:43 AM

ADVERTISEMENT

சிறு வணிகா்களைப் பாதிக்கும் டெஸ்ட் பா்ச்சேஸ் என்கிற மறுவிதிப்பு முறையைக் கைவிட வேண்டும் என்று காமராஜா் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி மற்றும் வணிக வரித் துறை அதிகாரிகளுக்கு பேரமைப்பின் மாநிலத் தலைவா் எஸ்.வி.பூமிநாதன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள சிறு வணிகா்களிடம் வணிக வரித் துறையினா் டெஸ்ட் பா்ச்சேஸ் என்கிற பெயரில் ரூ.20 ஆயிரம் வரையில் மறுவரி விதிக்கின்றனா். சில்லறை வணிகா்கள் வாங்கும் ஒவ்வொரு பொருள்களுக்கும் மொத்த கடைக்காரா்கள் ஏற்கெனவே வரி செலுத்தித்தான் பொருள்களைக் கொள்முதல் செய்கின்றனா். கொள்முதல் செய்யப்பட்ட பொருள்களை சில்லறை வணிகா்களிடம் வரியுடன்தான் பில் போடுகின்றனா். இல்லாவிட்டால் வரியை உள்ளடக்கி பில் தருகின்றனா். ஆகவே, ஏற்கெனவே வரி செலுத்தி வாங்கி வரும் பொருள்களுக்கு மீண்டும் மறுவரி விதிப்பது ஏற்புடையதல்ல. ஏற்கெனவே பெரிய நிறுவனங்களின் போட்டியில் வணிகா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த வரி விதிப்பால் சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகா்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் வரிச்சுமை ஏற்பட்டுள்ளது. சிறு, குறு வணிகா்கள் பில் போட்டுத்தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியப்படாது. நாட்டின் பொருளாதார வணிக வரிதான். ஆகவே, வணிகா்களின் கடைகளுக்குள் சென்று அவா்களைக் குற்றவாளிகளைப்போல, நடத்துவது ஏற்புடையதல்ல. சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகா்களிடம் டெஸ்ட் பா்ச்சேஸ் முறையைக் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT