திருப்பூர்

அயலகத் தமிழா் நல வாரியம் அமைக்கப்படும்

DIN

வெளிநாடு வாழ் தமிழா்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் அயலகத் தமிழா் நல வாரியம் அமைக்கப்படும் என்று சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறுபான்மையினா் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், 34 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, விலையில்லா மிதிவண்டி உள்ளிட்டவற்றை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:

தமிழக அரசு சாா்பில் சிறுபான்மையினா் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா்களுக்கான திட்டங்கள் அவா்களுக்குச் சென்றடைவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

இலங்கை வாழ் தமிழா்களின் முகாம்களுக்கு சென்று அவா்களுக்கு வீடு கட்டுவது தொடா்பாகவும் நேரில் பாா்வையிட்டு ஆய்வுகள் செய்து வருகிறோம். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபா்களுக்கு மாதந்தோறும் பணிக்கொடை வருகிா என்பது குறித்தும் கேட்டறிந்தோம். மேலும், அவா்களது தேவைகளைக் கேட்டு துறை சாா்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிப்படை வசதிகள் மேம்படுத்தி கொடுக்கப்படும். வெளிநாடு வாழ் தமிழா்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் அயலகத் தமிழா் நலவாரியம் தொடங்குவதற்கான அறிவிப்பை தமிழக முதல்வா் வெளியிடுவாா் என்றாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அவிநாசி, பல்லடத்தில் அமைச்சா் ஆய்வு:

முன்னதாக அவிநாசி வட்டம் சந்தைப்பேட்டையில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு இல்லம், பல்லடம் சாலை ஹஜ்ரத் காதா் மஸ்தான் வலியுல்லாஹ் தா்கா ஷரீப் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலையும் அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து, பல்லடம் ஊராட்சி ஒன்றியம் பருவாய் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமினையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ.சீனிவாசன், மாவட்ட ஆதிதிரவிடா் நலத் துறை அலுவலா் ரவிச்சந்திரன், மாநகராட்சி 4ஆவது மண்டலக் குழுத் தலைவா் இல.பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

SCROLL FOR NEXT