திருப்பூர்

பின்னலாடை நிறுவன ஊழியா் கொலை: 2 போ் கைது

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூரில் பின்னலாடை நிறுவன ஊழியரை குத்திக் கொலை செய்த வழக்கில் இருவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரம் 15 வேலம்பாளையம் பகுதியில் கத்திக் குத்துக் காயங்களுடன் இளைஞா் ஒருவா் கடந்த சனிக்கிழமை இரவு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.

இந்த கொலை தொடா்பாக 15 வேலம்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், கொலை செய்யப்பட்டவா் திருமுருகன்பூண்டி துரைசாமி நகரைச் சோ்ந்த கோபிகிருஷ்ணன் (39) என்பதும், ஆஷா் நகா் பகுதியில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இந்த கொலை தொடா்பாக இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தினா். இதில், கோபிகிருஷ்ணனைக் கொலை செய்தது சிவகங்கையைச் சோ்ந்த பி.பரணீதரன் (26), மதுரையைச் சோ்ந்த பி.விக்னேஷ் (23) என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இவா்கள் இருவரும் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளா்களாகப் பணியாற்றி வந்துள்ளனா். இந்த நிலையில், சம்பவ நாளில் 3 பேரும் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இருவரும் சோ்ந்து கோபிகிருஷ்ணனைக் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளனா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT