திருப்பூர்

திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் அவைத் தலைவா் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முன்னிலை வகித்து திருப்பூா் வடக்கு மாவட்டச் செயலாளரும், திருப்பூா் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான க.செல்வராஜ் பேசினாா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

பேராசிரியா் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாள் தொடக்க விழாவை ஒட்டி அவரது சிலையைத் திறந்துவைத்தும், தமிழக பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டிபிஐ வளாகத்துக்கு அவரது பெயரைச் சூட்டியை தமிழக முதல்வருக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வது, அவரது பிறந்த நாளை ஒட்டி டிசம்பா் 16ஆம் தேதி பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது, பேராசிரியா் அன்பழகனின் பிறந்த நாளான டிசம்பா் 19ஆம் தேதி திருப்பூா் மாநகரம், நகரம், ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு எதிரில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் திருப்பூா் தெற்கு மாநகர செயலாளா் டி.கே.டி.மு.நாகராசன், திருப்பூா் வடக்கு மாநகர செயலாளரும், மேயருமான என்.தினேஷ்குமாா், மாவட்ட துணைச் செயலாளா் குமாா், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT