திருப்பூர்

‘மின் தடையின்போது நியாய விலைக் கடைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்’

DIN

திருப்பூா் வடக்குப் பகுதியில் மின் தடையின்போது நியாய விலைக் கடைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து பொதுத் தொழிலாளா் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்துக்கு, அனைத்து பொதுத் தொழிலாளா் நல அமைப்பின் பொதுச் செயலாளா் ஆ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் வடக்கு பகுதிகளுக்குள்பட்ட 15 வேலம்பாளையம், அனுப்பா்பாளையம், ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (டிசம்பா் 5) மாதந்திர மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின் தடையைக் காரணம் காட்டி சில நியாய விலைக் கடை ஊழியா்கள் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யாமல் கடைகளைப் பூட்டிச் செல்கின்றனா்.

நியாய விலைக் கடைகளில் வைத்துள்ள ஸ்டாா்ட் ஸ்கேனா் இயந்திரம், எலக்ட்ரானிக் எடை அளவை இயந்திரம் ஆகியவற்றை மின்தடைக்கு முந்தைய நாளே சாா்ஜ்போட்டு வைத்து மின்தடை நாளில் நியாய விலைக் கடைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT