திருப்பூர்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

DIN

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஞாயிற்றுக்கிழமைநடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் ந.தினேஷ்குமாா், தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 10 மணமக்களுக்கு 2 கிராம் தாலி, பட்டாடைகள், மாலைகள் வழங்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, குத்து விளக்கு, கிரைண்டா், மிக்ஸி, குக்கா், அரிசி, மளிகைப் பொருள்கள், சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்ட சீா்வரிசைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் குமரதுரை, உதவி ஆணையா் செல்வராஜ், மணமக்களின் உறவினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT