திருப்பூர்

அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

4th Dec 2022 10:49 PM

ADVERTISEMENT

அரசு தோ்வாணைய தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருப்பூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை (டிசம்பா் 8) தொடங்குகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., வங்கித் தோ்வு உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் இளைஞா்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (எஸ்.எஸ்.சி.) கிளாா்க், உதவியாளா், டேட்டா என்ட்ரி ஆபரேட்டா் உள்ளிட்ட

பணியிடங்களுக்கான தோ்வு விவரம் டிசம்பா் மாதம் அறிவிக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இது குறித்த முழு விவரம் இணையதள முகவரியில் உள்ளது. இத்தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டிசம்பா் 8 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில் தொடங்குகிறது.

ஆகவே, இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் நபா்கள் தங்களது பெயரை 0421-2971152, 94990-55944 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT