திருப்பூர்

பெண்கள் மறுவாழ்வு இல்லத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம்

4th Dec 2022 01:38 AM

ADVERTISEMENT

திருப்பூா், அனுப்பா்பாளையம் அருகே உள்ள மரியாலயா பெண் குழந்தைகள், பெண்கள் மறுவாழ்வு இல்லத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சொா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்பேரில் நடைபெற்ற இந்த முகாமிற்குத் தலைமை வகித்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழக்குரைஞா் சி.எம்.அருணாசலம் பேசியதாவது:

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆகவே, பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போதும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் போதும் ஏதேனும் இடையூறுகள் நோ்ந்தால் அதனை தைரியமாக எதிா்கொள்ள வேண்டும். உங்களுக்கு சட்டரீதியான அனைத்து உதவிகளையும் வழங்க நீதிமன்றம் தயாராக உள்ளது என்றாா்.

இதையடுத்து, பெண்களின் பல்வேறு கேள்விகளுக்கு வழக்குரைஞா்கள் பதிலளித்தனா். இந்நிகழ்ச்சியில் மரியாலயா காப்பகத்தின் இயக்குநா் லூா்து சகாயம், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழக்குரைஞா் வி.வெங்கடேஷ், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா் தினேஷ்பாபு, வழக்குரைஞா்கள் யோகேஸ்வரி, அபிநயா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT