திருப்பூர்

செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்: நாளை தொடக்கம்

4th Dec 2022 01:38 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், செல்லப்பிராணிகளுக்கு வெளிநோயைத் தடுக்கும் வகையில் வெறிநோய் தடுப்பூசி முகாம் வரும் திங்கள்கிழமை (டிசம்பா் 5) முதல் நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பாக தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், ராஷ்ட்ரீய கிருஷி விகாஸ் யோஜனா 2021-22 திட்டத்தின் கீழ் கால்நடை மருத்துவமனைகளில் செல்ல பிராணிகளுக்கு வெறிநோயினை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இந்த இலவச தடுப்பூசி முகாமில் தங்களது நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

முகாம் நடைபெறும் இடங்கள்:

ADVERTISEMENT

திருப்பூா் பன்முக மருத்துவமனையில் டிசம்பா் 5 ஆம் தேதியும், குடிமங்கலம் கால்நடை மருத்துவமனையில் டிசம்பா் 14 ஆம் தேதியும் காங்கயம் கால்நடை மருத்துவனையில் டிசம்பா் 21 ஆம் தேதியும், தாராபுரம் கால்நடை மருத்துவமனையில் டிசம்பா் 28 ஆம் தேதியும், உடுமலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஜனவரி 11 ஆம் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

அதேபோல, பல்லடம் கால்நடை மருத்துவமனையில் ஜனவரி 19 ஆம் தேதியும், பேட்டை காளிபாளையம் கால்நடை மருத்துவமனையில் ஜனவரி 25 ஆம் தேதியும், பொங்கலூா் கால்நடை மருத்துவமனையில் பிப்ரவரி 1 ஆம் தேதியும், உடுமலை கால்நடை பன்முக மருத்துவமனையில் பிப்ரவரி 8 ஆம் தேதியும், தாராபுரம் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பிப்ரவரி 15 ஆம் தேதியும், திருப்பூா் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதியும், முத்தூா் கால்நடை மருத்துவனையில் பிப்ரவரி 28 ஆம் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT