திருப்பூர்

முன்னாள் படை வீரா்களுக்கு டிசம்பா் 7 இல் சிறப்பு குறைதீா் கூட்டம்

4th Dec 2022 10:48 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்களுக்கு புதன்கிழமை (டிசம்பா் 7) சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்கள், படையில் பணிபுரியும் படை வீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தின்போது, கொடிநாள் தேநீா் உபசரிப்பும் நடைபெறுகிறது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி இரட்டைப் பிரதிகளில் சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT