திருப்பூர்

முத்தூரில் 6.70 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனை

4th Dec 2022 01:37 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 6.70 டன் வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.

இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த வார ஏலத்துக்கு 10,371 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 4,430 கிலோ. விலை கிலோ ரூ.20.80 முதல் ரூ.30.70 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.29.65.

74 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 2,282 கிலோ. விலை கிலோ ரூ.66.15 முதல் ரூ.88.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.84.65.

ADVERTISEMENT

ஏலத்தில் மொத்தம் 105 விவசாயிகள், 12 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.3.11 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT