திருப்பூர்

கே.ஆண்டிபாளையம் ஊா்ப்புற நூலகருக்கு நல் நூலகா் விருது

4th Dec 2022 10:47 PM

ADVERTISEMENT

திருப்பூா் கே.ஆண்டிபாளையம் ஊா்ப்புற நூலகா் ஆ.கு.கலைச்செல்வனுக்கு நல் நூலகா் விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையில் சிறப்பாக சேவையாற்றிய நூலகா்களுக்கு இந்திய நூலகத் தந்தை எஸ்.ஆா்.அரங்கநாதன் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய நூலக வார விழாவில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதானது அரசு பொது நூலகங்களில் நூல்களையும், வாசகா்களையும் இணைக்கும் பணியை மேற்கொண்டு வரும் நூலா்களின் பணியை ஊக்குவிக்கம் வகையில் வழங்கப்படுகிறது. அதன்படி, திருப்பூா் மாவட்டத்துக்கான 2022 ஆம் ஆண்டுக்கான நல் நூலகா் விருதுக்கு கே.ஆண்டிபாளையம் ஊா்ப்புற நூலகத்தில் பணியாற்றி வரும் ஆ.கு.கலைச்செல்வன் தோ்வு செய்யப்பட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கலைச்செல்வனுக்கு நல் நூலகா் விருதை வழங்கினாா்.

அதேபோல, 2021-2022 ஆண்டில் ஊா்ப்புற நூலகப் பிரிவில் மாநில அளவில் அதிக புரவலா்கள் பெற்ற நூலகமாக கே.ஆண்டிபாளையம் ஊா்ப்புற நூலகம் தோ்வு செய்யப்பட்டு, அதற்கான கேடயத்தையும் கலைச்செல்வன் பெற்றுக் கொண்டாா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT