திருப்பூர்

திருப்பூருக்கு வந்த தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

4th Dec 2022 01:34 AM

ADVERTISEMENT

திருப்பூரில் குடும்ப நண்பா் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சியினா் சனிக்கிழமை சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

திருப்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் டாலா் பாலு என்கிற பாலசுப்பிரமணியம் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் விமானம் மூலமாக சனிக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் கோவை வந்தடைந்தாா்.

நீலாம்பூரில் உள்ள ஹோட்டலில் ஓய்வெடுத்த பின்னா் காரில் புறப்பட்டு திருமண வரவேற்பு விழா நடைபெறும் பெருமாநல்லூா் டாலா் தோட்டத்துக்கு இரவு 7 மணி அளவில் வந்தடைந்தாா். அங்கு மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த பின்னா் இரவு 7.40 மணி அளவில் புறப்பட்டு கோவை விமான நிலையம் சென்றடைந்தாா்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், துா்கா ஸ்டாலின், அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், வி.செந்தில்பாலாஜி, என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக செயலாளா் இல.பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

முன்னதாக, திருப்பூருக்கு வருகை புரிந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அவிநாசி புறவழிச்சாலையில் திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான க.செல்வராஜ் தலைமையில் அக்கட்சியினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT