திருப்பூர்

உடுமலை அருகே மனநலம் பாதித்த பெண் கொலை

3rd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

உடுமலையை அடுத்துள்ள புக்குளம் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி தனா (எ) தனலட்சுமி (40). இவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை தனலட்சுமி இறந்த நிலையில் கிடந்ததைப் பாா்த்த உள்ளூா் மக்கள் ஊராட்சித் தலைவருக்கு தகவல் கொடுத்துள்ளனா். பின்னா் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த தனலட்சுமியின் சடலத்தை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா்.

இந்நிலையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் புக்குளத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினாா். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

உடுமலை போலீஸாா் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT