திருப்பூர்

மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா: டிசம்பா் 7 இல் தொடக்கம்

3rd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா டிசம்பா் 7 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கலைத் திறனை வெளிக்கொணரும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு கலை சாா்ந்த பயிற்சிகளும், 6 முதல் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி அளவிலான போட்டிகளும், வட்டார அளவிலான போட்டிகளும் ஏற்கெனவே நடத்தப்பட்டது. இதில், வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான போட்டில் திருப்பூா் ஜெய்வாபாய் மாதிரி நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டிசம்பா் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 9 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழாவில், மாவட்ட அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT