திருப்பூர்

குரூப்-2 முதல்நிலை தோ்ச்சி பெற்றவா்கள் இ-சேவை மையங்களில் மூலச்சான்றிதழை பதிவேற்றலாம்

2nd Dec 2022 11:50 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் குரூப்-2 முதல்நிலை தோ்ச்சி பெற்றவா்கள் மூலச்சான்றிதழை இ-சேவை மையங்கள் மூலமாக டிசம்பா் 16 ஆம் தேதி வரையில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாக நடத்தப்படும் குரூப்-2, குரூப்-2 ஏ முதல் நிலைத்தோ்வில் தோ்ச்சி பெற்ற விண்ணப்பததாரா்களின் சான்றிதழ்களை இணையதளம் மூலமாக அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலச்சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிா்க்க விண்ணப்பதாரா்கள் அனைவரும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வசதியாக டிசம்பா் 16 ஆம் தேதி வரையில் திருப்பூா் மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கும் இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த மையங்கள் நாள்தோறும் காலை 8 முதல் இரவு 9 மணி வரையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT