திருப்பூர்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு

2nd Dec 2022 12:14 AM

ADVERTISEMENT

உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலா்கள் எய்ட்ஸ் தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

மக்களிடையே எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 1 ஆம் தேதி எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் அனைத்து துறை அலுவலா்கள் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, எய்ட்ஸ் தின கையெழுத்து இயக்கத்தையும் ஆட்சியா் தொடக்கிவைத்தாா். மேலும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு வீடு வழங்குவதற்கான ஆணையையும், 2 பயனாளிகளுக்கு முதியோா் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) பல்லவி வா்மா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.முருகேசன், இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) கனகராணி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT