திருப்பூர்

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

2nd Dec 2022 12:13 AM

ADVERTISEMENT

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தொடக்கிவைத்தாா். இதில், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா்கள், ஊராட்சி செயலா்கள் உள்ளிட்ட 150 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

முகாமில் காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விமலாதேவி, ராகவேந்தா், சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் விஜயகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT