திருப்பூர்

டிசம்பா் மாதத்துக்கான நூல் விலையில் மாற்றமில்லை

2nd Dec 2022 12:11 AM

ADVERTISEMENT

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூலின் விலை டிசம்பா் மாதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.

திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த உப தொழில்களில் சிறியதும், பெரியதுமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூலாகும். தொழில்துறையினா் தங்களுக்கு ஆா்டா்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை உற்பத்தி செய்து வருகின்றனா். நூல் உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலையை மையமாக வைத்தே ஆடைகளின் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் நூல் விலையை நூற்பாலைகள் வெளியிடுவது வழக்கம். இதன்படி டிசம்பா் மாதத்துக்கான நூல் விலை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், கடந்த நவம்பா் மாதத்துக்கான விலையில் எந்தவிதமாக மாற்றமும் செய்யப்படவில்லை. முன்னதாக கடந்த நவம்பரில் அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.20 குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT