திருப்பூர்

மூலனூரில் ரூ. 63 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

2nd Dec 2022 11:49 PM

ADVERTISEMENT

மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 63 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 254 விவசாயிகள் தங்களுடைய 2,142 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 730 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 13 வணிகா்கள் இதை வாங்குவதற்கு வந்திருந்தனா்.

ஒரு குவிண்டால் ரூ. 7,850 முதல் ரூ. 10,319 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,950. கடந்த வார சராசரி விலை ரூ.8,880. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 63 லட்சம். விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT