திருப்பூர்

அங்காளம்மன் கோயிலில் பாலாலயம்

2nd Dec 2022 11:50 PM

ADVERTISEMENT

திருப்பூா் முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோயிலில் பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் முத்தணம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் செய்து சிறப்பிக்க முடிவு செய்யப்பட்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், முதல் கட்டமாக கோயிலில் பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி அளவில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ராஜாபட்டா் தலைமையில் சிவாச்சாரியாா்கள் செய்திருந்தனா். இதில், திருப்பூரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT