திருப்பூர்

போதை மாத்திரைகள் விற்பனை புகாா்: மருந்தகங்களில் அதிகாரிகள் சோதனை

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகரில் உள்ள மருந்தகங்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா என மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பூா் மாநகரில் உள்ள மருந்தகங்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு புகாா்கள் வரத்தொடங்கியது. இதையடுத்து திருப்பூா் குமாா் நகா், வலையங்காடு, சாமுண்டிபுரம், 15 வேலம்பாளையம், அனுப்பா்பாளையம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட மருந்தகங்களில் திருப்பூா் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆய்வாளா் உமாமகேஸ்வரி, 15 வேலம்பாளையம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ராஜேஸ்வரி ஆகியோா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, மருந்தகங்களின் அங்கீகாரம், விற்பனை செய்யப்படும் மருந்து பொருள்களை ஆய்வு செய்தனா். போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்தகங்களில் உள்ள விற்பனையாளகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

இதே போல திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மருந்தகங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT