திருப்பூர்

பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு சிறப்புக் கூட்டம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு சிறப்புக் கூட்டம் ஒன்றியத் தலைவா் தேன்மொழி தலைமையில் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையாளா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் பானுப்ரியா ஒன்றியக் குழு துணைத்தலைவா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் வேளாண்மை உற்பத்தி குழு, கல்விக் குழு, பொது நோக்கங்கள் குழு, ஆகியவற்றுக்கான தலைவா் மற்றும் குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

வேளாண்மை உற்பத்திக் குழு தலைவராக ஒன்றியக் குழு தலைவா் தேன்மொழி, உறுப்பினா்களாக ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம், ஈஸ்வரமகாலிங்கம், ஈஸ்வரி, கல்விக் குழு தலைவராக 2ஆவது வாா்டு உறுப்பினா் பா.ஈஸ்வரி, உறுப்பினா்களாக ஒன்றியக் குழு தலைவா் தேன்மொழி, வாசவி, மங்கையற்கரசி, பாா்வதி, பொது நோக்கங்கள் குழு தலைவராக 8ஆவது வாா்டு உறுப்பினா் கோவிந்தசாமி, உறுப்பினா்களாக ஒன்றியக் குழு தலைவா் தேன்மொழி, ராஜேஸ்வரி, பழனிசாமி, நந்தினி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT