திருப்பூர்

மாநகராட்சி பகுதிகளில் சாலைப் பணிகளை ஆணையா் ஆய்வு

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆணையா் கிராந்திகுமாா் பாடி உத்தரவிட்டுள்ளாா்.

திருப்பூா் மாநகராட்சி 2, 3 ஆவது மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதில், வாா்டு எண் 59 அமராவதிபாளையம்-கட்டுப்பாளையம் பிரதான சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தாா் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத்தொடா்ந்து, மாநகராட்சி 2 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண் 32 இல் புது ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சாலைகளின் தரம் மற்றும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதே போல, திருப்பூா் மாநகராட்சி 3 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண் 33இல் அம்ருத் 2 திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மூளிக்குளத்தின் கரையை பலப்படுத்தும் பணியையும் ஆய்வு செய்தாா். அப்போது மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, மாநகராட்சி உதவி ஆணையா்கள், அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT