திருப்பூர்

காங்கயத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காங்கயத்தில் அதிமுக கட்சியின் சாா்பில் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

காங்கயம் ஒன்றியத்தில்... காங்கயம், சென்னிமலை சாலையில் நெய்க்காரன்பாளையம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு காங்கயம் அதிமுக ஒன்றியச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை வகித்தாா். இதில், திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலா் பொள்ளாச்சி வ.ஜெயராமன் கலந்து கொண்டு, மக்களவைத் தோ்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பது, இளைஞா் இளம்பெண்கள் பாசறை அமைப்பது, புதிய இளைஞா்களை கட்சியில் இணைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

காங்கயம் நகரத்தில்... காங்கயம் நகரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு நகரச் செயலா் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை வகித்தாா். திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி வ.ஜெயராமன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினாா். இந்தக் கூட்டங்களில் அதிமுக கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றியப் பகுதி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT