திருப்பூர்

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3,257 கல்லூரி மாணவிகளுக்கு ரூ.3.90 கோடி நிதியுதவி

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 2022-23 ஆம் ஆண்டில் 3,257 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.3.90 கோடி நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் பெண் கல்வியைப் போற்றும் வகையிலும், உயா் கல்வியை உறுதிப்படுத்தும் வகையிலும் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவியா் இத்திட்டத்தில் பயனடையலாம்.

திருப்பூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 2022-23 ஆம் ஆண்டில் 40 கல்லூரிகளில் பயிலும் 3,257 மாணவிகளுக்கு உயா்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.3 கோடியே 90 லட்சம் அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், இரண்டாவது கட்டமாக 68 கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் 3,091 மாணவியா் விண்ணப்பித்துள்ளனா். இந்த மாணவிகளுக்கு கல்வித் துறை மற்றும் வங்கிகயில் இருந்து ஒப்புதல் பெற்றவுடன் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT