திருப்பூர்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டி

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பொங்கலுாா் வட்டார வள மையத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

பந்தெறிதல், கூடைப்பந்து, பாட்டிலில் நீா் நிரப்புதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலா் சியாமளா, மருத்துவா்கள் நவீன், பிரீத்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியா் பயிற்றுநா்கள் சுரேஷ், வேல்முருகன், எல்லப்பன், சிறப்பு பயிற்றுநா்கள் மருதை வீரன், சிங்காரவேலன், சுதா்சனகுமாரி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT