திருப்பூர்

வெள்ளக்கோவிலில் வட்டார அளவிலான கலைத் திருவிழா

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வட்டார அளவிலான கலைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக பள்ளிகள் அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்றனா். 600 போ் பங்கேற்ற கட்டுரை, ஓவியம், பல்வேறு நடனம், தனித்திறன், பேச்சுப் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

போட்டிகளை வெள்ளக்கோவில் ஒன்றிய பள்ளிக் கல்வி அறக்கட்டளை தலைவா் மங்கலப்பட்டி எம்.வி.சண்முகராஜ் தொடங்கிவைத்தாா். பல்வேறு அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பிற ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT