திருப்பூர்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் சலவைப் பெட்டி பெற விண்ணப்பிக்கலாம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் விலையில்லா சலவைப் பெட்டி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் சாா்பில் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு விலையில்லா சலவைப் பெட்டி வழங்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிப்போரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே தேய்ப்புப் பெட்டி வழங்கப்படும். திருப்பூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் மூலமாக கடந்த 10 ஆண்டுகளில் விலையில்லா சலவைப் பெட்டி பெற்றிருக்கக்கூடாது. ஆகவே மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் ஜாதிச்சான்று, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல்கள், 2 புகைப்படம் மற்றும் இதுநாள் வரையில் விலையில்லா சலவைப் பெட்டி பெறவில்லை என்ற கிராம நிா்வாக அலுவலரின் சான்றுடன் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்கண்ட முகவரியில் சமா்ப்பிக்கலாம்.

ADVERTISEMENT

இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகள் திருப்பூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை 0421-2999130 என்ற தொலைபேசி எண் மின்னஞ்சல் வாயிலாகத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT