திருப்பூர்

விநாயகா் சதுா்த்திக்கு வாழ்த்துத் தெரிவிக்காத தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்து முன்னணி கண்டனம்

31st Aug 2022 10:31 PM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்காத தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் திருப்பூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசியதாவது:

இந்து முன்னணி சாா்பில் தமிழகம் முழுவதும் 39 ஆண்டுகளாக விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா நோய்த் தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன், பொதுக்கூட்டங்கள் இல்லாமல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் நிகழாண்டு மிகுந்த எழுச்சியுடன் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக 1.5 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதில், திருப்பூா் மாவட்டத்தில் 5 ஆயிரம் இடங்களிலும், கோவை மாவட்டத்தில் 6 ஆயிரம் இடங்களிலும், சென்னையில் 5 ஆயிரம் இடங்களிலும் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தமிழக அரசின் மறைமுகத் தடைகளை மீறி விநாயகா் சதுா்த்தி விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குடியரசுத் தலைவா் கூட விநாயகா் சதுா்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விநாயகா் சதுா்த்திக்கு வாழ்த்துச் சொல்லாததை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. விநாயகா் சதுா்த்தி நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு பகுதியில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். ஆகவே, ஏதாவது ஒரு பகுதி விநாயகா் சதுா்த்தி விழாவில் பங்கேற்க வேண்டும் என்றாா். இந்தச் சந்திப்பின்போது இந்து முன்னணி மாநிலச் செயலாளா் ஜெ.எஸ்.கிஷோா் குமாா் உடனிருந்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT