திருப்பூர்

உடுமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்திய 2 கடைகளுக்கு அபராதம்

31st Aug 2022 10:31 PM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாவட்டம் உடுமலையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திய 2 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவின்பேரில் மாவட்ட நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடுமலையில் கடந்த 2 நாள்களாக ஆய்வு நடத்தினா். இதில், உடுமலை நகராட்சிக்கு உள்பட்ட தளி சாலை, பழனிசாலை, கல்பனா சாலை ஆகிய இடங்களில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் என மொத்தம் 12 கடைகளில் ஆய்வு நடத்தினா். இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திய 2 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

மேலும் கெட்டுப்போன, செயற்கை வா்ணம் பூசப்பட்ட 5 கிலோ கோழி இறைச்சிகள், தயாரிப்பு தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 22 கிலோ சிப்ஸ் மற்றும் கார வகைகளையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது. அதே போல, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் 94440-42322 என்ற கைபேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT