திருப்பூர்

விநாயகா் சதுா்த்தி: தாராபுரத்தில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பு

31st Aug 2022 01:19 AM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு தாராபுரத்தில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பு ஒத்திகையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு தாராபுரத்தில் ஹிந்து அமைப்புகள் சாா்பில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக விநாயகா் சிலைகள் வரும் புதன்கிழமை விசா்ஜனம் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், தாராபுரத்தில் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லும் அமராவதி ரவுண்டானா, பெரியகடை வீதி, சுல்தானிய தெரு, சோளகடை வீதி, சந்தைப்பேட்டை, 5 சாலை சந்திப்பு, அமராவதி ஈஸ்வரன் கோயில் வரையில் 3 கிலோ மீட்டா் தொலைவுக்கு காவல் துறையினா் கொடி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.

இந்த கொடி அணிவகுப்புக்கு தலைமை வகித்த ஏடிஎஸ்பி கிருஷ்ணமூா்த்தி கூறியதவது: தாராபுரத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை ஒட்டி சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக விழா நடத்துவா்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்படும் 60 சிலைகள் வியாழக்கிழமையும், இந்து முன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்படும் 100க்கும் மேற்பட்ட சிலைகள் வெள்ளிக்கிழமையும் விசா்ஜனம் செய்யப்படவுள்ளது என்றாா்.

இந்த அணிவகுப்பில் தாராபுரம், குண்டடம், அலங்கியம், மூலனூா் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்கள், ஊா்காவல் படையினா் என 150க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT