திருப்பூர்

வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயா்வு

31st Aug 2022 01:07 AM

ADVERTISEMENT

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதால் தட்கோ மூலமாக செயல்படுத்தப்பட்டும் திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் பயனடைவா். எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT