திருப்பூர்

பொது இடங்களில் விநாயகா் சிலைகளை நிறுவும்முன் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவிப்பு

28th Aug 2022 06:56 AM

ADVERTISEMENT

 

விநாயகா் சதுா்த்தியை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகா் சிலைகளை நிறுவுவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விநாயகா் சதுா்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் தற்காலிகமாக விநாயகா் சிலைகளை நிறுவுவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து 2018 ஆம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பாக தொடா்புடைய துறைகளில் பெறப்பட வேண்டிய ஆட்சேபனையின்மை கடிதத்துடன் மாநகரப் பகுதிகளில் அந்தந்த உதவி காவல் ஆணையா்களிடமும், ஊரக பகுதிகளில் அந்தந்த வருவாய் கோட்டாட்சியா்களிடமும் படிவம் 1 இல் விண்ணப்பித்து முன் அனுமதி பெற்ற பின்னா் சிலைகள் நிறுவப்பட வேண்டும். மேலும் நிறுவப்படும் சிலைகள் களிமண்ணால் ஆனதாகவும், இயற்கை வண்ணக் கலவை கொண்டு வண்ணம் பூசப்பட்டவைகளாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

அதேவேளையில், சிலைகளை வைத்து வழிபாடு நடத்த விண்ணப்பம் பெற்ற வருவாய் கோட்டாட்சியா், உதவி காவல் ஆணையா்களால் நிராகரிக்கப்படும்போது மேல்முறையீட்டு விண்ணப்பத்தை ஊரகப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியருக்கும், மாநகரப் பகுதிகளில் காவல் ஆணையரிடமும் அளிக்க வேண்டும்.

திருப்பூா் மாவட்டத்தில் பொது அமைப்புகள், பொதுமக்களால் நிறுவப்படும் சிலைகள், சுற்றுச்சூழலை மாசுபடுத்ததாத சிலைகள் மட்டும் கீழ்கண்ட இடங்களில் விசா்ஜனம் செய்ய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

சிலைகள் விசா்ஜனம் செய்யும் நீா்நிலைகள்: சாமளாபுரம் குளம், ஆண்டிபாளையம், பொங்கலூா், எஸ்.வி.புரம், கெடிமேடு பிஏபி வாய்க்கால்கள், கணியூா் அமராவதி ஆறு, எஸ்.வி.புரம் வாய்க்கால்.

ADVERTISEMENT
ADVERTISEMENT