திருப்பூர்

சா்வதேச சிலம்பாட்ட போட்டி:அவிநாசி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை

28th Aug 2022 06:50 AM

ADVERTISEMENT

 

சா்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டியில் அவிநாசியைச் சோ்ந்த 15 மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனைப் படைத்துள்ளனா்.

சா்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டி நேபாளில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழகம், கேரளம், ஜம்மு காஷ்மீா், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கோவா, நேபாள் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

தமிழகம் சாா்பில் அவிநாசி ராயம்பாளையம் சிங்கை கோதாமுத்து வாத்தியாா், அவிநாசியப்பா் நினைவு உடற்பயிற்சி சாலை, வெள்ளியம்பாளையம், கருவலூா் கிளைகளைச் சோ்ந்த 15 மாணவ மாணவிகள்

8 முதல் 30 வயதுக்குள்பட்டோா் பங்கேற்று தங்கப் பதக்கங்களைப் பெற்றனா்.

மேலும் நேபாள், இந்தியாவுக்கு இடையான போட்டிகளில் அதிகப்படியான புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றனா்.

இதில், சிறந்த விளையாட்டு வீரருக்கான கோப்பையை அவிநாசி வெள்ளியம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மாணவா் சுபாஷ் பெற்றாா்.

சிலம்பாட்ட ஆசிரியா்கள் ராமன், லட்சுமணன், துணை ஆசிரியா்கள் தேவஅரசு, ஈஸ்வரன், கௌரவ ஆலோசகா் ஆனந்த கிருஷ்ணா், திருப்பூா் மாவட்ட உலக சிலம்பு விளையாட்டு சங்க செயலாளா் லோகநாதன், மாணவ மாணவியா் உள்ளிட்டோருக்கு சமூக ஆா்வலா்கள், விளையாட்டு ஆா்வலா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT