திருப்பூர்

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு

28th Aug 2022 06:48 AM

ADVERTISEMENT

 

பல்லடம் அருகே ஆடு மேயத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பல்லடம் அருகே உள்ள ஆலூத்துபாளையம் செங்காட்டு தோட்டம் பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி மனைவி சரஸ்வதி (50). இவா் தனது தோட்டத்தில் ஆடுகளை சனிக்கிழமை மேய்த்துக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், சரஸ்வதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 5 பவுன் தங்கச் சங்கிலி,

ADVERTISEMENT

1/2 பவுன் கம்மல், வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளாா்.

இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் சரஸ்வதி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT