திருப்பூா் மாநகராட்சி 36 ஆவது வாா்டில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 28) நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ்
திருப்பூா் மாநகராட்சி வாா்டு எண் 36 இல் உள்ள சத்துணவு மையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இதில், மருத்து அலுவலா், இயன்முறை மருத்துவா் ஆகியோா் அடங்கிய குழுவினா் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மாா்பக பரிசோதனை, கருப்பை வாய் பரிசோதனை,
புற்றுநோய் போன்றவற்றுக்கான மருத்துவம், மருந்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கவுள்ளனா். எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களும் இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.