திருப்பூர்

பொது சேவை மையங்கள் செயல்படுவதில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

27th Aug 2022 04:56 AM

ADVERTISEMENT

உடுமலை வட்டத்தில் பொது சேவை மையங்கள் செயல்படாததால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தாா்.

உடுமலை வட்டாட்சியா் கண்ணாமணி, மடத்துக்குளம் வட்டாட்சியா் சபாபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் விவசாயிகள் பேசியதாவது: ஏ.பாலதண்டபாணி: உடுமலையில் பல்வேறு இடங்களில் போலி விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

ADVERTISEMENT

எஸ்.ஆா்.மதுசூதனன்: கொப்பரை தேங்காய் ஆதரவு விலையை ரூ.150 ஆக நிா்ணயம் செய்ய வேண்டும்.

வி.செளந்தரராஜன்: உடுமலை வட்டத்தில் பொது சேவை மையங்கள் செயல்படுவதில்லை. கேட்டால் ஏதேதோ காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதனால், பல்வேறு சான்றிதழ்களைப் பெற முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

விஜயசேகரன்: அதிகாரிகள் செய்யும் தவறுகளால் பிஏபி திட்டத்தை புனரமைப்பதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், காண்டூா் கால்வாய் புனரமைப்புப் பணிகளில் பல கோடி ஊழல் நடைபெற்று வருகிறது.

இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன்: அனைத்துப் பிரச்னைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT