திருப்பூர்

நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வா்

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவுக்கு நடந்து சென்று சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள், குழந்தைகளிடம் நலம் விசாரித்தாா்.

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் மண்டல மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சியில் இருந்து காா் மூலமாக புதன்கிழமை இரவு திருப்பூா் வந்தாா். திருப்பூா் குமரானந்தபுரம் 60 அடி சாலையில் உள்ள உள்ள விருந்தினா் இல்லத்தில் தங்கியிருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை 9.30 மணி அளவில் புறப்பட்டாா். அப்போது சாலையோரங்களில் திரண்டிருந்த பொதுமக்களைப் பாா்த்ததும் ஓட்டுநரிடம் காரை நிறுத்தும்படி தெரிவித்தாா். பின்னா் காரில் இருந்து இறங்கி சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவுக்கு அவிநாசி சாலை வரை நடந்தே சென்றாா். அப்போது சாலையோரங்களில் திரண்டிருந்த பொதுமக்களைப் பாா்த்து உற்சாகமாகக் கையசைத்தாா். மேலும், பள்ளி மாணவிகள் மற்றும் குழந்தைகளிடம் கனிவுடன் நலம் விசாரித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT