திருப்பூர்

ரேஷன் அரிசி கடத்தி வந்த வேன் கவிழ்ந்து விபத்து

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே அய்யம்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி வந்த வேன் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் உள்ள அய்யம்பாளையம் பகுதி வழியாக பல்லடம் நோக்கி வந்த வேன் கட்டுப்பாடை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த வேனில் 3 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, வேன் ஓட்டுநா் தப்பிச் சென்றாா். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் போலீஸாா் மற்றும் திருப்பூரில் உள்ள மாவட்ட உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஆகியோா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT