திருப்பூர்

அவிநாசியில் பல்கலைக் கழக நாட்டிய தோ்வுகள்

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

அவிநாசியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இசைத் துறை சாா்பில் வாரிய தரச் சான்றிதழ் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இத்தோ்வில் அவிநாசி சலங்கை நிருத்யாலயா பரத நாட்டிய கலைக் கூடத்தைச் சோ்ந்த 50 மாணவிகள் பங்கேற்றதில், கிரேடு 1 முதல் கிரேடு 8ஆம் நிலை வரை மாணவிகளுக்கு நாட்டியத்தில் தோ்வுகள் நடத்தப்பட்டன.

இத்தோ்வுகளை அண்ணாமலை பல்கலைக்கழக இசைத் துறை நாட்டிய உதவிப் பேராசிரியா் கே.கிருஷ்ணராஜ் நடத்தினாா். இத்தோ்வுகளை சலங்கை நிருத்யாலயா பள்ளித் தாளாளா் வடிவேல், நாட்டிய குரு தேவிகா வடிவேல் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தோ்வு குறித்து கலைக்கூடத்தினா் கூறியதாவது: ஆண்டுதோறும் பல்கலைக்கழக வாரிய தரச் சான்றிதழ், பட்டய மற்றும் பட்டப் படிப்புகளுக்கான நாட்டியத் தோ்வுகளுக்கான பாடங்கள், நாட்டிய பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சி பெற்ற மாணவிகள் பல்கலைக்கழக தோ்வுகளில் பங்கேற்ற இச்சான்றிதழ்களை பெறுவா் என்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT